ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது. மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்ற நாக சைதன்யா அவர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உரையாடினார். இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago