மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் செப்.7-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் 6 சண்டை இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர்.
ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள, ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்குச் சண்டை காட்சிகளை அமைத்தவர்கள். “இந்தப் படத்தில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, பைக் துரத்தல்கள், கார் சேஸிங் காட்சிகள் என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் 6 வெவ்வேறு சண்டை இயக்குநர்களைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago