சென்னை: நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு 2 ஜோடிகள். ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago