சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவர் ‘குஷி’ படத்தில் நடித்தபோது, மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் சிகிச்சைக்குப் பின் இப்போது ஓரளவு குணமடைந்த சமந்தா அவர் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பை முடித்தார்.
முழுவதும் குணமடையாததால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகவும் இதற்காக ஒரு வருடம் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், தோழியுடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற அவர், ‘குஷி’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார். அதை முடித்துக்கொண்டு நேற்று முன் தினம் ஹைதாராபாத்தில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் அவர் தாயாரும் சென்றுள்ளார்.
நியூயார்க்கில் இன்று நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் கலந்துகொள்கிறார். பின்னர், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா முழுவதும் குணமடைந்த பின் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago