மறைந்த இயக்குநர் சித்திக் குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் ஆறுதல்

By செய்திப்பிரிவு

மறைந்த இயக்குநர் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கரியரில் முக்கியமான இரண்டு வெற்றிகளை கொடுத்தவர் இயக்குநர் சித்திக். கடந்த 2001-ம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு நடிப்பில் வெளியான படம் ‘பிரண்ட்ஸ்’. இயக்குநர் சித்திக் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் க்ளைமேக்ஸில் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உருகினர். அதன்பிறகு ‘வேட்டைக்காரன்’ தொடர்ந்து தனது 50ஆவது படமான ‘சுறா’ படங்களின் பேக் டூ பேக் தோல்வியிலிருந்த விஜய் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அப்போது 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அவர் நடித்த ‘காவலன்’ திரைப்படம் ஹிட்டடித்தது. இதன் மூலம் விஜய்க்கு கம்பேக் கொடுத்தார் சித்திக். 2001 மற்றும் 2011 சரியாக 10 வருட இடைவேளையில் இரண்டு வெற்றிப்படங்களை விஜய்க்கு கொடுத்த இயக்குநர் சித்திக் கல்லீரல் பிரச்சினையால் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கொச்சியில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் சூர்யா, சித்திக்கின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்தார் நடிகர் விஜய். ‘லியோ’ஷூட்டிங் முடிந்த கையுடன் ஓய்வுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த விஜய்யால் சித்திக்கின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 17) மறைந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தை தொடர்பு கொண்ட நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாததற்கும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்