“ஏன் இப்படி நடக்கிறது என எனக்குள் ஆதங்கம் இருந்தது” - ‘மாமன்னன்’ விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “எனக்குள் 20-30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் தான் இந்தக் கதை” என ‘மாமன்னன்’ 50ஆவது நாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “எல்லாப்புகழும் இறைவனுக்கே. எனக்குள் 20-30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் தான் இந்தக் கதை. ஏன் இப்படி நடக்கிறது? என ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

என்னால் இசையில் எதுவும் பண்ண முடியவில்லை. யார் செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன். படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என நினைக்கவில்லை. எனக்குப் பிடித்த இயக்குநர்களின் சாயலில் இருந்தது படம். உதயநிதியுடன் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சியை பார்த்ததும் படத்தை சிறப்பாக கொடுக்க முடிவு செய்தேன். அப்போது தான் ‘ராசா கண்ணு’ பாடலுக்கான ஐடியா தோன்றியது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்