சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
இறுதிகட்ட பணிகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்துவந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிச் விஷுவல்ஸ் கவனம் பெறுகிறது. கூடவே நடிகர் சந்தானத்தின் ஸ்கிரீன் பர்சனஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை டீசர் உணர்த்துகிறது. காதல் + காமெடியாக இப்படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகளும் வசனங்களும் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், மொத்த டீசரில் ஈர்க்கும் காமெடியும், அழுத்தமான கதைக்கான லீட் எதுவுமில்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம். படம் செப்டம்பர் 1-ல் திரையில் வெளியாகிறது. டீசர் வீடியோ:
» தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டம்: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்
» “ரஜினி மீதான அன்பு தொடர்கிறது” - ’காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago