லண்டன்: ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த டேர்ரன் கென்ட் காலமானார். அவருக்கு வயது 39.
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மூலம் பிரபலமானவர் டேர்ரன் கென்ட். கிழக்கு இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியைச் சேர்ந்த இவர், 2008ஆம் ஆண்டு வெளியான ‘மிர்ரர்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 2021ஆம் ஆண்டு கென்ட் இயக்கிய ‘யூ நோ மீ’ என்ற குறும்படம் விருதுகளை வென்றது.
‘ஸ்னோ ஒயிட் அன்ட் தி ஹன்ட்ஸ்மேன்’, ’மார்ஷல்’ஸ் லா’, ‘ப்ளடி கட்ஸ்’, ‘தி ஃப்ரான்கெஸ்டெய்ன் க்ரோனிக்கல்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘டன்ஜன்ஸ் அண்ட் டிராகன்ஸ்: ஹானர் அமாங் தீவ்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் கென்ட். தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகளும் இருந்து வந்தன. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உடல்நலக் குறைவால் கென்ட் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago