சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது ரஜினியின் 4-ஆவது ரூ.300 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் படம் ரூ.78 கோடியை வசூலித்தது. வார இறுதி நாட்களில் படத்துக்கான வரவேற்பு அதிகரித்ததால் வசூலும் கூடியது. அதன்படி படம் வெளியான 4 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.148 கோடி வசூலாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படிப் பார்க்கும்போது ‘ஜெயிலர்’ ரஜினியின் 4-ஆவது ரூ.300 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் ‘எந்திரன்’, ‘கபாலி’, ‘2.0’ படங்கள் வரிசையில் ‘ஜெயிலர்’ படமும் இணைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago