சென்னை: மோசமான வானிலை காரணமாக ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை, தொடர் மழை மற்றும் என் அன்புக்குரிய ரசிகர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இன்றைய இசை நிகழ்ச்சி வேறொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை பனையூரில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்த நிலையில், கான்சர்ட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ரஹ்மானின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago