சினிமாவில் 64-வது வருடம்: கமல்ஹாசனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் 64- வது வருடத்தில் அடி எடுத்துவைக்கிறார். அவருக்கு ரசிகர்கள்வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல்படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி இன்றோடு 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இப்போது முழுமையான இந்திய நடிகர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட6 மொழிகளில் 232 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 40 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த,‘மரோ சரித்ரா’, ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ ஆகிய படங்கள் அவரை அங்கு முக்கியநடிகராக உயர்த்தின. ‘ஏக் துஜே கே லியே’, ‘சத்மா’, ‘சாகர்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் முக்கியத்துவம் பெற்றார். கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

பத்மபூஷன், 4 தேசிய விருதுகள் உட்படபல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமல்ஹாசன், தமிழ்த் திரைத்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘குருதிப்புனலில்’ டால்பி ஸ்டீரியோ சவுண்ட் தொழில்நுட்பம், ‘மும்பை எக்ஸ்பிரஸில் டிஜிட்டல் வடிவம், ‘விஸ்வரூபம்’ படத்தில் அதிநவீன ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் உட்பட பலவற்றை தனது படங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிப்பிலும் பல்வேறு உச்சத்தைத் தொட்டுள்ள கமல்ஹாசன் திரைத்துறையில், 64 வது வருடத்தைத் தொடங்கி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’படத்தை முடித்துள்ள கமல் அடுத்து ‘கல்கி 2898ஏடி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்