நாங்குநேரி சம்பவம்: ஜி.வி.பிரகாஷ், மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்

By செய்திப்பிரிவு

நாங்குநேரியில் அண்ணன், தங்கை மீது நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.

மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.

மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்றவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர்.

அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் அம்மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாங்குநேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் விரைவாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணன், தங்கையின் உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியூர் பள்ளியில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன். தங்கை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்