ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்த இடம்’ பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஜிந்தா பந்தா’ (தமிழில்: வந்த எடம்) பாடல் அண்மையில் வெளியானது. இப்பாடலை அனிருத் பாடியிருந்தார். இந்தியில் இர்ஷாத் காமில் எழுத தமிழில் இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
» விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் ஓடிடியில் வெளியான ‘ஆதிபுருஷ்’
» நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு