விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் ஓடிடியில் வெளியான ‘ஆதிபுருஷ்’

By செய்திப்பிரிவு

மும்பை: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கிய திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்திருந்தனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசர் வெளியான போதே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. பின்னர் இதனை உணர்ந்த படக்குழு, மேலும் ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸை மேம்படுத்தியது. எனினும் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருகட்டத்தில் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.

இந்த நிலையில், இப்படம் எந்தவித விளம்பரங்களும் இன்றி இன்று (ஆகஸ்ட் 11) ஓடிடியில் வெளியாகியுள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் இந்தி பதிப்பு நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்