“கண்டிப்பாக ‘ஜெயிலர்’ பார்ப்பேன்; ஐ லவ் ரஜினி” - ஷாருக்கான் பகிர்வு

By செய்திப்பிரிவு

'ஜெயிலர் படத்தை பார்ப்பீர்களா?' என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு, ‘கண்டிப்பாக பார்ப்பேன்’ என நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவ்வப்போது ட்விட்டரில் #asksrk என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை ட்விட்டரில் எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர், “ஜவான் படத்தில் இருக்கும் மெசேஜ் ஒன்றை சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், “பெண்கள் முன்னேற்றம் குறித்தும் அவர்களை மதிப்பது மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்பது பற்றிய வலுவான கருத்தை படம் வெளிப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

‘‘ஜெயிலர்’ பார்ப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக பார்ப்பேன். ஐ லவ் ரஜினி. அவர் ஜவான் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எங்களை ஆசிர்வதித்தார்” என்றார். ‘தென்னிந்திய ரசிகர்கள் குறித்து ஒரு வார்த்தை’ என்ற கேள்விக்கு, “ஜவான் மூலம் அவர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்” ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்