துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாகிறது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தைத் துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில். படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ட்ரெய்லர் எப்படி? சுமார் 2.34 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். 1980-களில் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதை களத்தில் துல்கர் கவனம் ஈர்க்கிறார். கால்பந்து, மாரடோனா என மலையாள சினிமாவுக்கு உரித்த சில குறியீடுகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. கேங்ஸ்டர் வாழ்வில் ஏற்படும் காதல். அதன்பின் நடைபெறும் மாற்றங்கள் என கதை நகரும் என தெரிகிறது.

ட்ரெய்லர் வீடியோ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்