மலையாள ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

கொச்சி: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள, ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகிறது.

‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் னிவாசன் நடித்துள்ள இப்படமும் இன்று வெளியாக இருந்தது. இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், கேரளாவில் 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரஜினியின் ‘ஜெயிலர்’ இன்று வெளியாகிறது. ஒரே நேரத்தில், ஒரே தலைப்பில் 2 படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்பதால், மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஆக.18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE