உலகம் முழுவதும் ரூ.89 கோடியை வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மாவீரன் திரைப்படம் ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தகவல். மாவீரன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE