துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ட்ரெய்லர் நாளை (ஆகஸ்ட்10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கிங் ஆஃப் கோதா’. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தைத் துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸும் ஜீ ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காரைக்குடி பகுதியில் நடைபெற்றது.
படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். 1980-களில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருப்தியாக இல்லை என்பதால் ரீ ஷூட் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குநர் சித்திக் மறைவையொட்டி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
» அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ செப்டம்பர் 28-ல் ரிலீஸ்
» புகழஞ்சலி | “என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி சித்திக்” - சூர்யா உருக்கம்
அதன்படி ட்ரெய்லர் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரை தமிழில் நடிகர் சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் வெளியிடுகின்றனர்.