இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
» புகழஞ்சலி | “என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி சித்திக்” - சூர்யா உருக்கம்
» காதல், திருமணம், சிக்கல்... - விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’ ட்ரெய்லர் எப்படி?
இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago