கொச்சி: மறைந்த இயக்குநர் சித்திக் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
மலையாளம், தமிழ், இந்தியில் வெற்றிப்படங்களை கொடுத்த புகழ் பெற்ற இயக்குநர் சித்திக் மறைந்தார். கல்லீரல் தொடர்பான பிரச்சினைக்காக கடந்த ஜூலை 10-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறியதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர் ஐசியூவிலிருந்து மாற்றப்பட்டார். மேலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மீண்டும் ஐசியூவுக்கு மாற்றபட்டார். அவரது சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் கொச்சியின் கடவந்த்ரா பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கே அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது நடிகர் லால் சித்திக்கின் உடலை பார்த்து உடைந்து அழுதார். இயக்குநர் ஃபாசில் அவருக்கு ஆறுதல் கூறினார். அடுத்து வந்த ஃபஹத் ஃபாசில் லாலை கட்டியணைத்து தேற்றினார். டோவினோ தாமஸ், ஜெயராம், வினீத், இயக்குநர் ஷியாத் கொக்கர், ரஹ்மான், இயக்குநர் பி.உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.நடிகர் லாலை பொறுத்தவரை தன் நண்பனின் பிரிவை ஏற்க முடியாமல் சித்திக் உடலுக்கு அருகே அமர்ந்திருந்தார். இன்று மாலை 6 மணிக்கு எர்ணாகுளம் ஜும்ஆ மசூதியில் அரசு மரியாதையுடன் சித்திக்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
சித்திக் லால் கூட்டணி: முதன்முதலாக 1986-ல் மோகன்லால் நடித்து வெளியான ‘பப்பன் பிரியப்பட்ட பப்பன்’ படத்துக்கு கதை திரைக்கதை எழுதியது. தொடர்ந்து மோகன்லால் நடித்த ’நாடோடிக்காட்டு’. அதன் பிறகு 1989ல் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தை சித்திக் - லால் இணைந்து இயக்கியிருந்தனர். ஃபாசில் தயாரித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தமிழில் ‘அரங்கேற்ற வேளை’ என்ற பெயரில் ஃபாசில் ரீமேக் செய்தார். இந்தியில், ’ஹெரா ஃபெரி’ என்ற பெயரில் பிரியதர்ஷன் ரீமேக் செய்தார்.இன் ஹர்ஹர் நகர்’, ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ‘காபூலிவாலா’ உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கியது.
» புகழஞ்சலி | “சாமானியனின் கதைகளை திரையில் பிரதிபலித்தவர் சித்திக்” - மோகன்லால்
» “இந்தி திரைப்படங்கள் மட்டுமே ‘பாலிவுட்’ அல்ல” - ஏ.ஆர்.ரஹ்மான்
’காபூலிவாலா’ படத்துக்குப் பிறகு சித்திக் - லால் கூட்டணி உடைந்தது. லால் நடிப்பில் கவனம் செலுத்த, சித்திக் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். இயக்கத்தில் பிரிந்தாலும் சித்திக்கின் சில படங்களை லால் தயாரிக்கவும் செய்தார். 1996ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் சித்திக் இயக்கிய ‘ஹிட்லர்’ படத்தை லால் தயாரித்திருந்தார். 1999ஆம் ஆண்டு லால் தயாரிப்பில், சித்திக் இயக்கிய ‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் பெரும் ஹிட்டடித்தது. இப்படம் இதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகி அசல் படத்தை விஞ்சும் அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago