சென்னை: ‘மாவீரன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியானது.
இப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (ஆக.09) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்த வீடியோ நேற்று போட்டிருக்க வேண்டும். ஆனால் காஷ்மீரில் இருப்பதால் போடமுடியவில்லை. ’மாவீரன்’ படம் 25 நாட்களைக் கடந்துள்ளது. இதற்கு காரணமான மக்கள் அனைவருக்கும் நன்றி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘மாவீரன்’ படம் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து வாழ்த்தினார். அது எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு தருணம். ’ஜெயிலர்’ பட வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என் படத்தை பார்த்து, எனக்கு மட்டுமின்றி என் குழுவில் இருக்கும் எல்லாருக்கும் வாழ்த்து தெரிவித்தது, ‘தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்’. நாங்கள் உங்கள் ரசிகன் என்பதை எப்போதும் சொல்வேன். உங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நான், உங்களுக்கு பேனர் வைத்து கொண்டாடிய எனக்கு நீங்கள் படம் பார்த்துவிட்டு வாழ்த்துவது என் வாழ்நாள் சாதனை. ’ஜெயிலர்’ படம் உங்கள் சரித்திரத்தில் இன்னொரு சிறப்பான படமாக இருக்கும்” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
» நாளை ‘ஜெயிலர்’ வெளியாகும் நிலையில் இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்
» ‘கான்ட்ராக்டர் நேசமணி’ முதல் விஜய்க்கு ‘கம்பேக்’ வரை: இயக்குநர் சித்திக் நினைவலைகள்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago