பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்: தமிழில் ஃப்ரெண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கியவர்

By செய்திப்பிரிவு

கொச்சி: பிரபல மலையாள இயக்குநர் சித்திக் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார். அவருக்கு வயது 63.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்