இங்கே ரஜினி, அங்கே சிரஞ்சீவி: தமன்னா மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ரஜினிகாந்துடன் தமன்னா நடித்துள்ள ‘ஜெயிலர்’ வரும் 10-ம் தேதி வெளியாகிறது. அதற்கு மறுநாள் சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள ‘போலா சங்கர்’ படம் தெலுங்கில் வெளியாகிறது. ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தது பற்றி தமன்னா கூறியதாவது: ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருமே பெரிய நடிகர்கள். அவர்களுடன் நடித்தது என் கனவை நனவாக்கியது. அதுவும் ஒரே நேரத்தில் இந்தப் படங்கள் வெளியாவதில் மகிழ்ச்சி.

‘போலா சங்கர்’, ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் என்றாலும் இயக்குநர் மெஹர் ரமேஷ் தெலுங்குக்காக நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார். இதில் படம் முழுவதும் வருகிறேன். கீர்த்தி சுரேஷுடன் இந்தப் படத்தில் நடித்ததை ரசித்தேன். நாங்கள் தோழிகள் ஆகிவிட்டோம். ‘ஜெயிலர்’ படத்தில் சிறிய கேரக்டர்தான். நான் ஆடிய ‘காவாலா’ பாடல் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்