‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த கைலாஷ் நாத் காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல நடிகர் கைலாஷ் நாத் காலமானார். அவருக்கு வயது 65. மலையாள நடிகரான கைலாஷ் நாத், கேரள மாநிலம் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர். மிமிக்ரி கலைஞரான இவர், 1977-ம் ஆண்டு வெளியான, ‘சங்கம்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஏதோ ஒரு ஸ்வப்னம்’, 'சேதுராமய்யர் சிபிஐ', 'சீதா கல்யாணம்', 'யுகபுருஷன்' உட்பட 163 படங்களில் நடித்துள்ளார். தமிழில் டி.ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’படத்தில் தம்பு என்ற கேரக்டரிலும் ‘பாலைவனச் சோலை’ படத்தில் நண்பர்களில் ஒருவரான வாசு என்ற கேரக்டரிலும் நடித்தார்.

‘வள்ளி’ உட்பட 90 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக, கல்லீரல் அழற்சிக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் காலமானார். அவர் மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE