சென்னை: 'மௌன குரு', 'மகாமுனி' படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கும் படத்துக்கு, ‘ரசவாதி – The Alchemist’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் பற்றி சாந்தகுமாரிடம் கேட்டபோது, “ பிரேசில் எழுத்தாளர் பவுலோ கோய்லோ எழுதிய ‘ரசவாதி’ நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தமில்லை. அந்தப் பெயரில் நாவல் இருப்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். இந்தக் கதைக்கு ரசவாதி என்றபெயர் பொருத்தமாக இருந்ததால் வைத்துள்ளேன். அது ஏன் என்பது படம் பார்க்கும்போது புரியும். அர்ஜுன்தாஸ் வாழ்வில் நடக்கிற விஷயங்களைப் பற்றி இந்தப் படம் பேசும்.அவருக்கு நடிக்க வாய்ப்புள்ள வேடம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பின்னணி இசை பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago