இளம் ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பலர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

மோகன்லால் - மீனா ஜோடியின் மகன் பிருத்விராஜ். இவர்களின் குடும்ப நண்பர் லாலு அலெக்ஸின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். பிருத்விராஜும் கல்யாணியும் ரகசியமாகக் காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் கல்யாணி தாய்மை அடைகிறார். திருமணத்துக்குப் பெற்றோரிடம் பேச நினைக்கையில், மீனாவும் தாய்மை அடைந்திருக்கிறார். இந்தப் பிரச்சினை என்னவாகிறது என்பதுதான் கதை. இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சிரஞ்சீவி நடிக்கும் இந்தப் படத்தில் மீனா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார்.

பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் கல்யாணி கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். ‘பங்கர்ராஜூ’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். இதற்கிடையே 39 வயது ஷர்வானந்துக்கு 40 வயது த்ரிஷாவை எப்படி அம்மாவாக நடிக்க வைக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்