'Breaking Bad', 'Better Call Saul' தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார்.
நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார்.
பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவை பூர்வீகமாக கொண்ட இவர், டெம்பிள் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துள்ளார். நடிப்புக்காக, நியூயார்க் நகரத்துக்கு குடிபெயர்ந்தார். ஹாலிவுட்டில் நடிப்பு ஜாம்பவான் ஸ்டெல்லா அட்லரின் மாணவர் மார்க் மார்கோலிஸ். பின்னர் நடிகர்கள் பார்பரா லோடன் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் ஆகியோராலும் நடிப்பு பயிற்சி பெற்றார்.
1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், "பிரேக்கிங் பேட்" மற்றும் "பெட்டர் கால் சால்" ஆகிய தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago