தன்னம்பிக்கை, வலி, போராட்டம்... - பால்கியின் ‘Ghoomer’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

இயக்குநர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூமர்’ (Ghoomer) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

‘பா’, ‘சமிதாப்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பாலிவுட் இயக்குநர் பால்கி அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் டிராமா கதை ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ‘கூமர்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அபிஷேக் பச்சன், சயாமி கெர் முதன்மை கதாபாத்திரங்களிலும், ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ‘லாஜிக் படி பார்த்தால் ஒற்றைக் கையுடன் நாட்டுக்காக யாராவது ஒருத்தரால் விளையாட முடியுமா என்றால் முடியாது. ஆனால், வாழ்க்கை ஒரு மேஜிக்’ என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர் மென்மையாக கடக்கிறது. மொத்த ட்ரெய்லரும் ஒருவித தன்னம்பிக்கையை விதைக்கிறது.

கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் சயாமி கெர் விபத்தில் கையை இழக்கிறார். மீண்டும் தன்னை வலியிலிருந்து விடுவித்து ஒற்றை கையுடன் போராடி பெண்கள் கிரிக்கெட் டீமின் சிறந்த பவுலராக எப்படி பரிணமிக்கிறார் என்ற கதையை ட்ரெய்லர் சொல்லிவிடுகிறது. இருப்பினும் இதைத் தாண்டிய திரைக்கதை ஒன்றை அழுத்தமாக பால்கி கோத்திருப்பதை காட்சிகள் உறுதி செய்கின்றன. பயிற்சியாளராக அபிஷேக் பச்சனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அமிதா பச்சன் கேமியோவில் தோன்றி மறைகிறார். இம்மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக இருக்கும் எனத் தெரிகிறது. ட்ரெய்லர் வீடியோ;

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE