சென்னை: மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ‘தங்கலான்’ பட தோற்றத்தை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்துக்காக நடிகை பார்வதி உடல் எடையை குறைந்திருந்தார். மாளவிகா மோகனன் சிலம்பு உள்ளிட்ட கடுமையான பயிற்சிகளை கற்றுக்கொண்டார். படத்தின் பிரதான பகுதிகள் கர்நாடகாவின் கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்றது. அண்மையில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாளையொட்டி அவரது ‘தங்கலான்’ பட தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு ஆரத்தி என பெயரிடப்பட்டுள்ளது. கையில் கத்தி பொருந்திய வேல்கம்பை பிடித்தபடி மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார். குறிப்பாக, அவரின் உடைகள் படம் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்ட கதை என்பதை உணர்த்துகிறது. பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் வகையில் தீப்பொறிகள் தெறிக்கும் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
» ’குட் நைட்’ மணிகண்டனின் புதிய படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய் சேதுபதி
» சந்தானத்தின் ‘கிக்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: இந்த மாதம் ரிலீஸ்
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago