புதுச்சேரியில் 11-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை துவக்கம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 11-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 11 தமிழ்த் திரைப்படங்கள் உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த 32 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் 11-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இவ்விழா ஆகஸ்ட் 4 முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.

இத்திரைப்பட விழாவில் கான் திரைப்பட விழா, மும்பைத் திரைப்பட விழா ஆகியவற்றில் விருது பெற்ற சர்வதேச அளவில் சிறந்த படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் 9 நாடுகளைச் சேர்ந்த 32 படங்கள் திரையிடப்படுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 11 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ள. இளம்படைப்பாளிகளின் இலக்கிய படங்கள் விழாவில் இடம் பெருகிறது.

திரைப்படங்கள் தொடர்பான விவரங்களை ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லொரன் ஜலிகு, தமிழ்நாடு திரை இயக்கத்தின் நிர்வாகி தமிழ் மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், செல்வம், கணேசன், உமா அமர்நாத், கலிய மூர்த்தி ஆகியோர் வெளியிட்டு கூறியது: “இவ்விழாவின் தொடக்க நிகழ்வு நாளை மாலை அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

அமைச்சர் லட்சுமி நாராயணன், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லொரன் ஜலிகு, எடிட்டர் லெனின், இயக்குநர் சிவகுமார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், த.மு.எ.க.ச பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகளை புதுச்சேரி திரை இயக்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், உமா அமர்நாத், மணி, கலியமூர்த்தி, செல்வம், பச்சையம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இவ்விழாவில் இளம் படைப்பாளிகள், திரை விமர்சகர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நடக்கும். விழாவில் த.மு.எ.க.ச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பேராசிரியர் இளங்கோ, திரைக் கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தொடக்க நாளில் படங்கள் மாலை 6.35 மணி முதல் திரையிடப்படவுள்ளன. முதலில் அனிமேசன் படமாக மிக்சி, ரைடர் ருக்மணி, மை இமேஜினரி கன்ட்ரி படங்கள் திரையிடப்படவுள்ளன.

5ம் தேதி காலை 9.30 முதல் ஸ்கூல் பெல், லா பப்பிள், ராட்சத அரக்கன், பீ டேல்ஸ், அட்மிட்டட், டர்ன் யுவர் பாடி டூ த சன், ஸ்வீட் பிரியாணி, யா, என்ஜின் ஆப் தமிழ்நாடு, முதல் கேள்வி, அனலி, ரைட்டிங் வித் பயர் படங்கள் திரையிடப்படுகிறது. 6ம் தேதி காலை மர்டர்டர், லாட்டரி டிக்கெட், அமாங்க் அஸ் உமன், பிரெஞ்ச் ரோஸ்ட், பிரதர் ட்ரோல், லவ் இஸ் லவ், சணல், டோபி காட், த டிரான்ஸ்பார்மேஷன், ஆல் தட் பிரீத்ஸ் உட்பட 32 படங்கள் திரையிடப்படுகிறது" என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்