அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘‘OMG-2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உமேஷ் சுக்லா இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஓ மை காட்’. அக்ஷய் குமார், பரேஷ் ராவல் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘OMG-2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. அம்ரித் ராய் இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய குமார், பங்கஜ் திரிபாதி நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - முதல் பாகத்தில் இயற்கை பேரிடரால் தனது கடை சேதமடைந்ததற்காக கடவுளின் மீது ஒருவர் வழக்கு தொடுப்பதே கதை. அதே பாணி கதைக்களத்தையே இந்த பாகத்திலும் இயக்குநர் கையில் எடுத்திருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ஆனால், சென்சார் பிரச்சினையால் இதில் ட்ரெய்லரின் முதல் காட்சியிலேயே சிவன் நந்தியிடம் தன்னுடைய அடியாருக்கு உதவு யாரையேனும் அனுப்புமாறு கூறுவது போல கிராபிக்ஸ் காட்சி வருகிறது. எனவே, இதில் அக்ஷய் குமார் கடவுளா அல்லது கடவுளின் தூதுவரா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. அதில் பரேஷ் ராவலுக்கு பதில் இதில் பங்கஜ் திரிபாதி.
முதல் பாகத்தில் கடவுளாக வந்த அக்ஷய் குமார். இதில் சிவனின் தோற்றத்தில் ஜடாமுடியுடன் வருகிறார். தனது மகன் மீது விழுந்த பழியை துடைக்க நீதிமன்றத்தில் வழக்குப் போடும் நாயகனுக்கு அக்ஷய் எப்படி உதவுகிறார் என்பதே படத்தின் கதை. ட்ரெய்லர் முழுக்க வரும் நகைச்சுவை வசனங்கள், இயல்பான காட்சி அமைப்புகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. ‘OMG-2' ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago