“பாட்ஷாவை விட டபுள் ஹிட் ஆகும்” - ரஜினியின் ‘ஜெயிலர்’ குறித்து ராகவா லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “எனக்கு பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய அதே உற்சாகத்தை இதுவும் ஏற்படுத்தியது. இந்த படம் பாட்ஷாவை விட டபுள் ஹிட் ஆகும்” என ‘ஜெயிலர்’ பட ட்ரெய்லரை பார்த்து பிறகு சிலாகித்து பேசியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,“ஜெயிலர் பட ஷோகேஸை பார்த்த பின் ஒரு ரஜினி ரசிகராக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எனக்கு பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய அதே உற்சாகத்தை இதுவும் ஏற்படுத்தியது. இந்த படம் பாஷாவை விட டபுள் ஹிட் ஆகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி இப்படியாக காட்சிப்படுத்தியதற்கு நெல்சன், சன்பிக்சர்ஸ் ஆகியோருக்கு நன்றி. அனிருத்தின் அற்புதமான இசை. மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அரை மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE