கர்நாடக முதல்வர் சித்தராமையா பயோபிக்கில் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்துக்கான வேலைகள் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. படத்துக்கு ‘லீடர் ராமையா’ (Leader Ramaiah) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ‘ஏ கிங் ரைஸ்டு பை பிபிள்’ (A King Raised by the People) என்பது படத்தின் டேக்லைன். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை சத்யா ரத்னம் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘கதலேகானா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். ப்ரீ புரொடக்சனின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையாவின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகரை படக்குழு தேடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அணுகியதாகவும், அவர் க்ரீன் சிக்னல் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதியின் ஷெட்யூலை பொறுத்து படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு தயாராக இருப்பதாக சொல்லபடுகிறது. க்ளைமாக்ஸின் 20-30 நிமிடங்கள் சித்தராமையா படத்தில் தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் பலரும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்தராமையா இன்று அரசியலின் உச்சத்தை தொட்டகதையை காண அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்