சினிமா கனவுகளின் கலை. இந்தக் கலையில் ஒளி மற்றும் நிழல்கள் மூலமாகவே கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைப் பிரம்மாண்டமான திரைக்காட்சிகளாக உருவாக்கவும் அல்லது எளிமையாகச் சொல்லவும் ஒளிப்பதிவாளருக்கு முறையான, தெளிவான திரை ஒளியமைப்பு (film lighting) நுணுக்கங்கள் அவசியம். ஒவ்வொரு திரைப்படத்திலும் பார்க்கும் காட்சிகளோடு பார்வையாளர்கள் ஒன்றிப் போக, லைட்டிங்கிற்கும் பெரும் பங்கு இருக்கிறது. கதாபாத்திரங்களின் வெவ்வேறு மன நிலையை வெளிப்படுத்த திரை ஒளியமைப்பு முக்கியமானது. அதனால் அதை ‘லைட்’டான விஷயமாகக் கடந்து விட முடியாது.
திரைத்துறையில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பம் சினிமாவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதைப் போல , இரண்டு மூன்று வருடங்களாக ஒளிப்பதிவு கருவிகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இப்போது லைட்டிங் (lighting) விஷயங்களும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. புதிதாக வந்திருக்கும் லைட்டுகள் பற்றிய விவாதம் உலக அளவில் நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாரிடம் கேட்டோம். இவர், ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, ‘பெரியார்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவு பற்றியும் சினிமா லைட்டிங் பற்றியும் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.
“திரை ஒளியமைப்பின் முக்கியத்துவம் ஒரு திரைப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். ஆரம்பத்தில் திரைத்துறையில் தவிர்க்கப்பட்டு வந்த எல்இடி பல்புகளால் ஆன லைட்டுகள், பெரிய அளவிலான மாறுதலை இப்போது உருவாக்கி இருக்கிறது. முன்பு இந்த லைட்டுகள் தரம் குறைந்து இருந்தன. ஆனால் டெக்னாலஜியின் வாயிலாக இப்போது இந்த எல்இடி லைட்டுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.
இதன் மூலமாக, எளிதாக எந்த வண்ணத்தையும் மாற்றலாம். ஒரு ஆம்புலன்ஸ் எபெக்ட், மழை பெய்து இடி இடிக்கிற வெளிச்சம், ஒரு நாயகனின் அல்லது ஒரு கதாபாத்திரத்தின் முகத்துக்கு மட்டுமேயான வெளிச்சம் உட்பட பல தன்மைகளை, வெறும் பட்டன்கள் மூலமாகவே உருவாக்க முடியும். இந்த லைட்டுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் எளிதானது. வீட்டில் இருக்கும் மின்சாரத்தில் இருந்தும் இதைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் வசதி. இதற்கு முன் சக்தி வாய்ந்த லைட்டுகளைப் பயன்படுத்தும்போது, வெப்பம் அதிகமாக இருக்கும். இப்போது வந்திருக்கிற புதிய லைட்டுகளில் அது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
‘இந்தியன் 2’ போன்ற படங்களில் கதாபாத்திரங்களுக்கு, ‘பிராஸ்தடிக் மேக்கப்’ போடுகிறார்கள் என்றால், வெப்பம் அதிகம் உருவாகாத லைட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு இந்த லைட்டுகள் பொருத்தமானவை.
அந்த லைட்டுகளில் 300 வித வண்ணங்களை உருவாக்க முடியும். ரிமோட் மூலமாகவும் மிகவும் எளிமையாக இதை இயக்க முடியும். இவை சிறு பட்ஜெட் படங்களுக்கு உதவியாக இருக்கும். பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தேவையான விஷயங்களும் இதில் இருக்கின்றன. பல்வேறு வகைகளில், ஏன் ஒரு தீப்பெட்டி அளவில் கூட இதுபோன்ற லைட்டுகள் வந்துள்ளன. இந்த லைட்டை எங்கு வேண்டுமானாலும் வைக்கமுடியும் என்பது கூடுதல் வசதி. ஒரு முழு படத்தைத் தயாரிக்க 80 கிலோ வாட் ஜெனரேட்டர்கள் தேவைப்படும் சூழலில், இந்த நவீன லைட்டுகள் மூலம் 12 கிலோ வாட் ஜெனரேட்டர்களே போதுமானவை. இந்தப் புதிய லைட்டுகள் சினிமா துறைக்கு வரம்” என்கிறார் சி.ஜே.ராஜ்குமார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago