சென்னை: நடிகர் சூர்யா தனது ‘காக்க காக்க’ திரைப்பட நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்தப் படம் கடந்த 2003-ல் இதே ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதனை முன்னிட்டு சூர்யா இந்தப் படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் தாமரை எழுதி இருந்தார்.
படம் ரசிகர்களின் அதீத வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதையின் களம் பார்வையாளர்கள் ஈர்த்தது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட முறையில் போலீஸ் கதையை சொல்லிய படம்.
“எனக்கு அனைத்தும் கொடுத்த படம் இது. அன்புச்செல்வன் கதாப்பத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஜோதிகா தான் இந்தப் படம் குறித்து என்னிடம் முதலில் பேசி இருந்தார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சக நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. நல்ல பல நினைவுகள் இதில் உள்ளன” என சூர்யா ட்வீட் செய்துள்ளார். இதோடு காக்க காக்க படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.
» ஆயுஷ்மான் குர்ரானாவின் ‘ட்ரீம் கேர்ள் 2’ ட்ரெய்லர் வெளியீடு
» முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago