கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’: யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் தகவல்

By செய்திப்பிரிவு

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்தி, தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாஃபியா, உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடியை வசூலித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்து குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்