மோகனின் ‘ஹரா’ படத்தில் 93 வயதில் ‘டான்’ கதாபாத்திரத்தில் சாருஹாசன்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் 93 வயதான சாருஹாசன் இணைந்து நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தாதா 87’, ‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘ஹரா’. இந்தப் படத்தில் மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் 93 வயதாகும் சாருஹாசன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் 'ஹரா' படத்தில் சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்