ஜெயிலர் அதிகாலை காட்சிக்கு அனுமதி ரத்து?

By செய்திப்பிரிவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப் உட்படப் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முதல் காட்சி 9 மணிக்குத்தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, “இதுவரை அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் எங்களுக்கு வரவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்” என்றார்.

இதற்கு முன் வெளியான, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், மாமன்னன் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்