சென்னை: “சுறா படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. இனியும் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்” என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். ‘சுறா’ படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. நிறைய படங்களில் நமக்கே தெரியும்.
நாம் நடிக்கும்போதே இது சரியாக வராது என்பதை உணர முடியும். ஆனால், வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்று எல்லாவற்றையும் அணுக முடியாது. நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தாகவேண்டும். அது வேலையின் ஒரு பகுதி” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago