‘ஜென்டில்மேன்’ 30 ஆண்டுகள் - கேக் வெட்டிக் கொண்டாடிய ஷங்கர்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஷங்கர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஜென்டில்மேன்’. 1993ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.

இப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #30YearsofGentleman என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலரும் அப்படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஷங்கர் தனது உதவியாளர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தற்போது ஷங்கர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்