சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் பாடல்கள் வெளியிடபட்டுள்ளன.
பாடல்களைப் பொறுத்தவரை அருண்ராஜா காமாராஜா வரிகளில் ஏற்கெனவே ‘காவாலா’ ஹிட்டடித்தது. இந்தப்பாடலை அனிருத், ஷில்பா ராவ் இணைந்து பாடியிருந்தனர். சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் குரலில் ‘ஹூகும்’ பாடலும், தீ குரலில் ‘ஜூஜூபி’ பாடலும் ரஜினிக்கான ‘மாஸ்’ மற்றும் ரிவெஞ் பாடல்களாக அமைந்துள்ளன. தவிர, ‘முத்துவேல் பாண்டியன் தீம்’, ‘அலப்பரை தீம்’, ‘ஜெயிலர் ட்ரில்’, ‘ஜெயிலர் தீம்’ என 4 தீம்கள் அனிருத் இசையில் அனிவகுத்துள்ளன. இதில் சர்ப்ரைஸாக விக்னேஷ் சிவன் வரிகளில் ‘ரத்தமாரே’ என்ற பாடலை விஷால் மிஸ்ரா பாடியிருக்கிறார். சொல்லப்போனால் அனிருத்தே மொத்த ஆல்பத்தையும் ஆக்கிரமத்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
» சென்னையில் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா: அலைமோதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம்
» 15 Years of Subramaniapuram | திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: சசிகுமார் அறிவிப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago