சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்துவந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி இருக்கிறது?: டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. இதுவரை காதல் காட்சிகளில் மட்டுமே பார்த்து பழகிய பிரியங்கா அருள் மோகனை இப்படத்தில் துப்பாக்கி ஏந்தி பார்க்க முடிகிறது. தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் மூவரின் இன்ட்ரோ காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜான் கொக்கேன் புதுமையான கெட்அப்பில் வில்லத்தனம் காண்பிக்கிறார். 1.33 நிமிட டீசரில் டயலாக் பெரிதாக இல்லாமல் படம் முழுக்க சண்டை, துப்பாக்கி என புதுமையாக கவனம் ஈர்க்கிறது.
» ஆஸ்கர் மியூசியத்தில் ‘காட்ஃபாதர்’ படம் பார்த்த ரஹ்மான், கமல்ஹாசன்: வைரலாகும் புகைப்படங்கள்
» விரைவில் ‘மரகத நாணயம் 2’ - உறுதி செய்த இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago