லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை கண்டு ரசித்தனர். அவர்களது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகின்றன. மேலும் நவீன தொழில்நுட்பம் மூலம் கமல்ஹாசனின் வயதை குறைத்துக்காட்டும் பணிகளில் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் மாகாணத்தில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் நடிகர் கமல்ஹாசன் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற இந்த மியூசியத்தில் கமலும், ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை கண்டு ரசித்துள்ளனர். மேலும் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற புகைப்படங்களை கமலும் ரஹ்மானும் பார்த்தனர்.
» தனித்துவக் குரலால் தலைமுறை கடந்து ஈர்க்கும் ‘சின்னக் குயில்’ சித்ரா | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருது வென்ற ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago