சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியும், அவர் மனைவிசாக் ஷியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழில்‘எல்.ஜி.எம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தை இயக்கி இசை அமைத்திருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படம்பற்றி இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, 'இந்தப் படத்துக்கான கதைக் கருவை, சாக் ஷி தோனி சொன்னார். மிகவும் பிடித்திருந்தது. அதை விரிவாக்கம் செய்து கொடுத்தேன். அதுதான் இந்தப் படம். இது ஜாலியான திரைப்படம். இதில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல், இயல்பான வசனங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் கதை சர்வதேச அளவுக்கானது. கதையில் நாங்கள் தீர்வு எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம். இது ஒரு ஃபேன்டஸி கதை. குடும்பத்தில் இருக்கும் மாமியார்,மருமகள் அவர்கள் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் பொருத்தமானது என்பதைச் சொல்லியிருக்கிறோம். இதை அறிவுரையாகச் சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம்” என்றார்.
சாக் ஷி தோனி பேசும்போது, “எங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் மொழி ஒரு தடையாக இல்லை. தோனிக்கு இங்குக் கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபூர்வமானது. இந்தக் கதையின் கான்செப்ட் என் தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விஷயங்களில் இருந்தும் உருவானது. இது ஒரு பாசிட்டிவான திரைப்படம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago