சென்னை: ‘96’ படம் மூலமாக கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமாருடன் நடிகர் கார்த்தி கைக்கோக்க உள்ளதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018-ம் ஆண்டு விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தை அறிமுக இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கியிருந்தார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ரூ.18 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அரவிந்த் சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கும் கோவிந்த் வசந்தா தான் இசையமைக்கிறார். இந்தத் தகவலை ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிசி ஸ்ரீராம் கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தேங்க்யூ’ தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
» “தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்வர். ஆனால்...” - ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு
» ஆங்கிலப் படம் பார்க்கும்போது இவர்களின் கோபம் எங்கே போகிறது? - வருண் தவான் கேள்வி
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago