சென்னை: ஆர்யா - சந்தானம் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நயன்தாரா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற சந்தானம் - ஆர்யாவின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. தற்போது கதை உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பாஸ் என்கிற பாஸ்கர’ இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சந்தானம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago