“ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் ஆள்” - ‘கக்கன்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மக்களவை உறுப்பினர், தமிழக அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த கக்கனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ஜோசப் பேபி தயாரித்துள்ளார். அத்துடன் அவரே கக்கன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபு மாணிக்கம் மற்றும் ரகோத் விஜய் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை மற்றும் ட்ரெய்லரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ட்ரெய்லர் எப்படி? - வாழ்க்கை வரலாறு என்பதால் ஆவணமாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான கக்கனின் போராட்டம், அரசியல் வாழ்க்கை என விரியும் ட்ரெய்லரில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தது, அவரது எளிமை என பல்வேறு விஷயங்கள் வந்து செல்கின்றன. ‘மனுசனுக்கு மனுசன் என்னப்பா தீட்டு குடிக்கிற தண்ணீயில’ என சாதிக்கு எதிரான வசனம், ‘ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு ஆளாக எங்க ஊர் காரர் வந்திருக்கிறார்’ போன்ற கக்கனின் பெருமையை உணர்த்தும் வசனங்கள், வறுமையிலும் நேர்மையாக இருக்கும் கக்கன் பதவி துஷ்பிரயோகம் குறித்து பேசும் இடங்கள் கவனம் பெறுகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்