சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 80, 90 காலக்கட்டத்தில் தனது நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர் கவுண்டமணி. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் நடிப்பதை வெகுவாக குறைந்துக்கொண்டார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘49-O’ படம் வெளியானது. தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் 2016-க்குப் பிறகு அவர் எந்தப் படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஷஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.
'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதுக்கு உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து ரசிப்பார்கள்” என்றார். படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago