ரஜினியின் ஜெயிலர் படம் எவ்வளவு நேரம் ஓடும்?

By செய்திப்பிரிவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. இதில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் ‘காவாலா’ பாடலும் ‘ஹூக்கும்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆக.10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீடு 28-ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இதற்காக, 1000 இலவச டிக்கெட்டுகளை குறிப்பிட்ட லிங்கில் பெறலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் எவ்வளவு நேரம் ஓடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம். முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்